Want to make creations as awesome as this one?

Transcript

தவளைகளைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுப்போம்...

தவளைகள்ஒரு ரவுண்ட்ஸ்

உலகமெங்கும் 5000 தவளை இனங்கள் உள்ளன. அவற்றின் குரல், ஒவ்வொன்று வேறுபட்டு இருக்கும்.

10 மில்லிமீட்டர் முதல் 1 அடி நீளம் வரையில் தவளைகள் உள்ளன. 1 கிராம் முதல் 3.25 கிலோ எடை வரை இருக்கின்றன.

டைனோசர் காலத்துக்கு முன்பிருந்தே தவளைகள் உள்ளன. கிட்டத்தட்ட 24 கோடி ஆண்டுகள். தவளைகள் பெரும்பாலும் நன்னீரில் மட்டுமே வசிக்கும்.

தண்ணீரில் வாழ்ந்தாலும், நீரைக் குடிப்பதில்லை. சருமத்தின் வழியாகவே தண்ணீரை எடுத்துக்கொள்ளும். மேல்தாடையில் மட்டுமே பற்கள் இருக்கும்.

தவளையின் காதுகளைப் பார்த்து ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கலாம். கண்களுக்குப் பின்னால் காதுகள் இருக்கும். கண்ணைவிடப் பெரியதாகக் காதுகள் இருந்தால் அது ஆண். சிறியதாக இருந்தால் பெண்.

தவளையின் கண்கள் ஒரே நேரத்தில் முன்னாலும், மேலாகவும் இரு பக்கங்களிலும் பார்க்கும் வல்லமை உண்டு. பாம்புகளைப் போல சருமத்தை உதிர்த்து, புதிய சருமத்தை உருவாக்கிக்கொள்பவை தவளைகள்.

சில தவளைகள் ஒரே சமயத்தில் 50,000 முட்டைகளை இடும். பெரும்பாலும் ஆண் தவளைகளே முட்டைகளைப் பாதுகாக்கும்.

தவளைகள் இரவாடிகள். இரவு நேரத்தில் நன்றாகப் பார்வை தெரியும். அதைவைத்தே இரையை வேட்டையாடுகின்றன. ஆப்பிரிக்காவில் வாழும் தவளைகள் 14 அடி வரை தாவும்.

எவ்வளவு அடர்த்தியான நிறம் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு விஷத்தன்மை உடையவை. அதிக விஷத்தன்மைகொண்ட தவளை, கோல்டன் பாய்சன் டார்ட் (Golden poison dart). ஒரு கிராம் விஷம், சுமார் 15000 பேரையும் கொல்லும் சக்தி வாய்ந்தது.

மத்திய அமெரிக்காவில் காணப்படுகிறது, கண்ணாடி தவளை (Glass frog). அதன் உடலுறுப்புகள், செரிமான மண்டலம் போன்றவற்றை வெளிப்படையாகப் பார்க்க முடியும்.

உலகின் மிகப்பெரிய தவளை, கோலியாத் (Goliath). 3.25 கிலோவும் 1 அடி நீளமும் உள்ள இவை, கேமரூன் மற்றும் ஈக்வடோரியல் கினியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே உள்ளன.

உலகில் மிகச்சிறிய தவளை, பாப்புவா நியூகினியா நாட்டில் காணப்படும், பீடோஃபிரினே அமௌவன்சிஸ் (Paedophryne amauensis) சுண்டுவிரல் நுனி அளவே இருக்கும்.

தொகுப்பு: ரா.கௌசல்யா

வீடியோ: என்.மல்லிகார்ஜுனா